பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

137


குக் கால்கட்டு போடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்குச் சாட்சியாக ஒர் அம்மிக்கல்லும் ஓர் அருந்ததியும் அமைந்தன. ஒருநாள், சோறு படைத்தாள் என் னைக் கொண்டவள் அரிசியிலிருந்து கற்களை விலக்கிப் போடக்கூடாதா? என என் ஆத்திரத்தை அவளி டம் காட்டினேன். வேறு நான் என்ன செய்வேன்? வியாபாரி அரிசி-கல் வியாபாரத்தை ரேஷன்' செய்வதற்காக, நாலுபேரைப்போல், அரசாங் கத்தை ஏச முடியுமா? ஏசிளுல்தான், சட்டம் என் னைச் சும்மா விடுமா? கோழி விரட்டக்கிடந்த ஒரு கல்லை-ரொம்ப ரொம்பச் சின்னக் கல்லொன்றை எடுத்து என் மனையாட்டிமீது வீச முயன்றேன். ஆமாம், முயன்றேன். ஆனல் வீசுவேன? அதற்குள் அவள் கல்லும் கரையும் வண்ணம் அழுதாள். 'கல் லானுலும் கணவன், புல்லாலுைம் புருஷன்னு எங்க பாட்டிக்குப் பாட்டி சொன்னதை மதிச்சு நடக்கிற எனக்கு இந்தத் தீவினையா? என்று "வசனம்' பேசிளுள், நானே குத்துக்கல்லாக அப்படியே நின்று விட்டேன். நான் கேவலம் ஒரு கல்லுக்கும் புல் லுக்கும் ஈடாக நேர்ந்ததேயென்று கல்லாய்ச் சமைந் தேன். ஆனல் அவள் சொன்ன அப்பழமொழி யின் தத்துவம், என் வயிறு காய்ந்த பிற்பாடு தான் எனக்குப் புலப்பட்டது. 'கல் தோன்றி மண் தோன்ருக் காலத்தே முன்தோன்றி மூத்த தமிழ்க் குடியின் மகத்தான பண்பாட்டில் கணவன் என்ற பாத்திரத்துக்குக் கொடுக்கப்பட்டுள்ள மதிப்புக் கும் மரியாதைக்கும் கல்லும் புல்லும் உவமையான 'விதி"யை நான் இன்றுவரை மறந்தது கிடிையாது.