பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

139


புசித்து வருவதாக மேலை நாட்டுச் செய்தியொன் றைச் சமீபத்தில் பத்திரிகைகளில் படித்தேன். விஞ் ஞானம் விண்ணை அளப்பதுடன், மண்ணையும் அளந்து வருகிறது. 'கல்லைத்தான் மண்ணைத் தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தான’’ என்று ஏங்கிய பழைய கவிஞர் கிடைத்தால், அவர் வாயில் ஒருபடியல்ல-ஒரு பிடி ரேஷன் ஜீனியைப் போடத் தயார் நான்! அரிசியிலிருந்து கல்லைப் பொறுக்கும் மாயத்தைக் கண்டுபிடிக்க எண்ணி யிருக்கும் என் மூளைக்கும் அப்போது ஒய்வு கிட் டுமே! சிறுநீரகத்தில் கற்கள் சேருவதால், அறு வகைச் சிகிச்சைக்கு ஆளான சரித்திரபுருஷர்களைப் பற்றிய செய்திகளும் நம்மைத் திடுக்கிடவைப்பது டன், கற்கள் நம்முள் விசுவரூபம் எடுக்கவும் தவ றுவது கிடையாது. கிணற்றில் போட்ட கல்லாக நாம் 'கம் மென்று இருப்பதைத் தவிர வேறு வழி ஏது? 'கல் என்ருல், வெறும் கல்' என்று நாம் சும்மா இருந்துவிடக்கூடாது. கல்லில் வைரக் கல்லும் உண்டு. சாதாரணக்கல்லும் உண்டு. அதை உணர நாம் கற்றுக்கொள்ளவேண்டும். இதற்கு ஆதார மூலம் கல்'தான். கல்=படி. கெளதமர் சாபமிட்டார் அகலிகைக்கு. கல் ஆளுள் அவள். கல்லாலுைம் கணவன் என்ற மூது ரையை அறிந்திருக்க வேண்டும். கல்லை அகலிகை ஆக்கினன் ரீராமன். சாபவிமோசனத்திலும்கல் இடம் பெற்றுவிட்டது.