பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140


இமயத்தினின்றும் கல் கொணர்ந்தான் செங் குட்டுவன. கண்ணகி உருவானள். சிலம்பு வாழ் கிறது! தலையில் கல் சுமக்கச் செய்து பழிவாங்கியவன் தமிழன். அபிடேகபாண்டியன் கல்யானைக்குக் கரும்பு கொடுத்த படலம் திருவிளையாடற் புராணப் புகழ் கொண்டது! கல்லால் எறியுண்டவன் கடவுள் ஆயிற்றே! கல்லடிபட்டாலும் கண்ணடி பட நாம் தயாராக இருக்கலாகாது! மனிதன் கல்லாக மட்டும் இருந்துவிடக்கூடாது. இந்நியதிக்குக் கல்வெட்டுக்கள் தேவையில்லை. 'கல்லிலும் செம்பிலுமோ இருப்பான் எங்கள் கண்ணுதலே' என்று கேட்கும் பட்டினத்தடிகள் ஈசன் இருக்குமிடத்தைச் சுட்டி, சொல்லிலும் சொல்லினும் வேதச் சுருதியிலும் அல்லிலும் மாசற்ற ஆகாயத்திலும், ஆய்ந்துவிட்டோர் இல் லிலும் அன்பரிடத்திலும் ஈசன் இருக்குமிடத்தை, வரையறுக்கின்ருர். கல்லுள் இருந்த கனல் ஒளி' யாய் இருக்கும் ஈசனின் விந்தையையும் அடிகளார் இயம்புகின்ருர். கல்லெல்லாம் மாணிக்கக் கல் ஆமோவென்று அங்கலாய்த்தார் புலவர் ஒருவர். ஆனல் கல்லுக்கு