பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 4 | யையும் பிரஹதீஸ்வரர் கோயிற் கலசத்தையும் அமைத்தான் இராஜராஜ சோழன்! 'நம் தந்தையர் செய்த விந்தைகள்' என்கிற நூலில் கல் சொல்லும் கதையை பேராசிரியர் கல்கி அவர்கள் பாங்குற வருணித்துள்ள அழகே, அழகு! இலக்கியத்தில் கல் பெறுகிற இடங்கள் பலப்பல. 'களிறு கடை இய தாள் மாவுடற்றிய வடிம்பு கல் அலைத்த தோள்:” இது எட்டாம் பதிற்றுப் பத்துப் பாடல் வரி யாகும். 'கல் சேர்பு இருந்த சில் குடிப்பாக்கத்துச் சூழலே ‘அகம் செப்பும். "செல்லாரும் பொழில் சூழும் புலியூரம் பலவாண தேவா உம்மைக் கல்லாலும் வில்லாலும் செருப்பாலும் பிரம்பாலும் கடிந்து சாடும் எல்லாரும் நல்லவரென்று இரங்கி அருள் ஈந்தது என்ன? இகழ்ச்சியொன்றும் சொல்லாமன் மலரைக் கொண்டெறிந்த வினைக்கொன்ற தென்ன? சொல்லு வீரே!...” -இப்படிக் கேட்கும் திறன் படைத்தது தனிப் பாடல். காளமேகப் புலவர் கேட்கிருர்!-துர்நடி ராசரைத் தரிசிக்கையில்!