பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143


தமிழறியும் பெருமாள். முற்பிறப்பில் ஓர் இள வாசி; அவளை வென்று மணம் புரிந்துகொண்ட விறகுத்தலையன் ஓர் இளவரசன். முற்பிறவியில் இவர்கள் இருவரும் தம்பதிகளாய் வாழ முடிய வில்லை. விறகுத்தலேயன், தமிழறிவாளை மணப் பதற்கு ஏற்படுத்தப்பட்ட நிபந்தனைகளை வெல்ல, மதுரைத் தமிழ்ச் சங்கப் புலவரான நக்கீரரின் அமு தத் தமிழ்ப்பாக்கள் கை கொடுத்தன. தமிழறிவாளைச் சந்திக்க வருகிருன் விறகுத் தலையன். நக்கீரர் அவ்வாறு வேடம் புனைந்திருக் கிருர் தோழிகளிடம் விறகுத்தலையனை அழைத்துச் சாப்பாடு போடும்படி ஆணையிடுகிருள் தமிழறி வாள். அவ்வாறே அப் பெருமனையின் பதிருைவது கட்டுக்குள் அழைத்துச் சென்று, ஒரு கல்லால் இலை யைத் தைத்து, வெந்ததும் வேகாததும் கல்லும் நெல்லும்ாய்ச் சாப்பாடு போடப்படுகிறது. நக்கீரர் சினம்பரப்பி நாவசைக்கிருர், “கல்லொன்று நெல்லிரண்டு காணுமணல் மூன்றரிசி கல்லயுடனஞ்சுவகை காட்டிலேன்-வில் நுதலாய்: வல்லபடி செய்த வகையெல்லாம் உங்களது . முல்லைநகை யாட்கு மொழி..." . . . இப்பாடலைக் கேட்ட தோழிகள், தம் தலைவி யிடம் போய்த் தகவலைச் செப்ப, உடனே அவ்விற குத்தலையனைக் கச்சேரி மண்டபத்து வரச்சொல்லி மீண்டும் ஆணையிடுகிருள். அவ்வாறே விறகுத் தலை யனை நக்கீரர் அங்கு செல்லும் தருணத்தில். சூத் திரப் பதுமைகள். அவரை அவமானப் படுத்த