பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144


எத்தனம் செய்ய, அவர் பலவாறு சமாளித்தார் அப்போது காந்தக் கல்லே கற்றுாணிலே தட்ட அதிலே நெருப்பு பறந்தது. இப்படிப் பல சோதனைகளைக் கடந்து, பின் திருமணம் கைகூடுகிறது! இப்படி, கல் சொல்லும் கதைகள்அனந்தம். நாதானியல் ஹாதர்ன் என்ற அமெரிக்கநாட்டு ஆசிரியர் எழுதிய சூரிய காந்தக் கல்’ (The Grea Carbuncle) இலக்கிய ரசனை கொண்டது. ஓராண்டில் பூமிமீது விழும் விண் கற்களின் எடை ஏறத்தாழ மூன்று கோடி டன்களாம்!“ஸ்புட்னிக்'குகளின் வாயிலாகத் தெரிய வந்த உண்மை இது. நட்டகல்லே சாமி. கல் தெய்வம், ஆனல், தெய்வம் கல்அல்ல!-அல்லவே அல்ல! இது தருமவிதி: கல் கசியும்: இது, வாழ்வியல் தத்துவம். கல் கனியாகும்! இது சிருஷ்டித் தத்துவம்.