பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'ஸார், மணி என்ன?” எப்போதோ படித்த மேலைநாட்டுக் கதை ஒன்று; அதை நான் எப்போதுமே மறப்பது இல்லே, கிழவி ஒருத்தி. அவள் வீட்டிலே கடிகாரம் ஒன்று, அதைச் சாட்சி வைத்து, கொலை ஒன்று நடந்துவிடுகிறது. கடிகாரத்தையும், கிழவியையும் சாட்சி வைத்து, துப்பறியும் இலாகா வழக்குத் தொடுத்தது. அக் கொலை நிகழ்ந்த நேரம் பகல் மணி பன்னிரண்டு. இக்குறிப்பும் வழக்குக்கு ஆதார சுருதியாகிறது. கடைசியில், கொலை செய்தவன் தப்பிக்க நேரிடுகிறது. காரணம் ஒன்று: கிழவிக்குச் சித்தபேதம். காரணம் இரண்டு; என் அருமைமகன் இறந்த நேரம், பகல் பன்னிரண்டு மணி. அப்போது நிறுத்தப்பட்ட கடிகாரம் இது. ஆகவே, எனக்கு இந்த ஒரு உண்மை மட்டிலும் எப்போதுமே நினைவிலிருக்கிறது. இந்த உண்மையை மட்டும் மறக்காத அளவுக்கு ஏன், மறக்க முடியாத அள வுக்குமட்டிலுமே எனக்குச் சுயசித்தம் இருந்து வரு கிறது!’ என்று சாட்சியம் சொன்னுள். அரசாங்கப் பிரிவு தொடுத்த வழக்கு தோற்ற நிகழ்ச்சிகளுள் இதையும் அடிக்கடி நினைவுபடுத்தும் மேலைநாட்டைச் சார்ந்த குற்றப்பிரிவினைச்சேர்ந்த சஞ்சிகைகள். காலத்தின் விந்தைக்கு எத்தனை எத்தனையோ திருட்டாந்தங்கள் உண்டு. காலம் ஒரு செப்பிடுவித்தைக்காரன். நான் கையாண்ட உவமைகளுள் எனக்குப்பிடித்த உவமை