பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152


அப்போது, அண்ணல் காந்தியடிகள் ஹிட்லருக் குக் கடிதமொன்று எழுதினர்; 'ஆங்கில ஏகாதி தியத்தை எதிர்த்துப் போராட, நீங்கள் பலாத் காரமான வழிகளைக் கடைப்பிடித்து வருகிறீர்கள், ஆல்ை, நானே அறவழி முறையில் நம்பிக்கை வைத்துச் செயற்பட்டு வருகின்றேன. இவ்விரு வழிகளிலே எதற்கு வல்லமை உண்டு என்பதைக் காலமன்ருே உலகுக்கு எடுத்துரைக்கவேண்டும்? - இது தான் கடிதம் கொண்ட அடக்கம். காலம் எனும் மணல் வெளியில் காலம்’. உரைத்திட்ட முடிவை நாம் அறிந்தவர்கள் தாமே! 'அட்டகாசம் செலுத்தும் அவத்தைச் சடலத்துடன் பட்டயாடு அத்தனையும் பகுத்தறிவது எக்காலம்?... அஞ்ஞானம் விட்டே, அருள்ஞானத்து . எல்லைதொட்டு, மெய்ஞ்ஞான வீடு பெற்று வெளிப்படுவது. எக்காலம்?...” மெய்ஞ்ஞானப் புலம்பலின் இரு துளிகள் இவை: மானுடராய்ப் பிறப்பது அரிது. அம்மானுடம் காலத்தை வென்று சிறப்பதே இனிது!