பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெயரில் எல்லாம் இருக்கிறது! ஆங்கில நாட்டின் மிகப் புகழ்கொண்ட நாட காசிரியரான மிஸ்டர் ஷேக்ஸ்பியர் இருக்கிருர் பாருங்கள், அவர் ரொம்பவும் அவசரக்காரராகத் தான் இருந்திருக்க வேண்டும். இல்லை யென்ருல், பெயரில் என்ன இருக்கிறது?’ என்று அபாண்ட மான ஒரு கேள்வியை அவர் திருவாய் மலர்ந்திருப் LTDrm? நான் மட்டும் அவர் காலத்தில் வாழ்ந்திருந் தால், அவருக்கு 'பெயரில் என்னதான் இல்லை, ஸ்ார்? பெயரில் எல்லாம்தான் இருக்கிறது!’ என்று பதில் கேள்வி விடுத்து, இப்படிப் பதிலும் உரைத் திருப்பேன். ஆம்; பெயரில் எல்லாம் இருக்கிறது. என் பேச்சைத் தயைசெய்து நம்புங்கள். இல்லையேல், உங்கள் பெயரை ஒரு பிரச்சனையாக்கி, ஒர் ஆராய்ச்சி நட்த்திப் பாருங்கள். அப்புறம் தன் போக்கில் என் வழிக்கு வந்து சேருவீர்கள். பெயர் சூட்டும் விழாவுக்கு ஐந்து, பத்து செலவானலும், அதல்ை ஏற்படக் கூடிய நன்மைகள் ஆயிரம், ஆயிரம் பெயர் என்ற ஒரு வழி இல்லாவிட்டால், தமிழக அரசின் சீட்டுப் பரிசுப் போட்டியில் யாருக்கென்று, பரிசளிப்பதாம்? நண்பர்களை இனம் கண்டுகொள்ள இந்தப் பெயர் இனம் உதவும், கடன் கொடுத்தவர்களுக்கும்