பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

154

கடன்பட்டவர்களுக்கும் இந்தப் பெயர்கள் ‘கோர்ட்’ வரை செல்லும். காதலுக்கும் பெயர் அவசியம், காதலின் துறைக்கும் அவ்வாறே.

வேலைக்கு மனுப் போட்டேன். பாரத்தில் முதலில் என் பெயர், அப்புறம் ஊரின் பெயர் என்று இப்படிப் பல வினாக்கள். வேலை கொடுப்பவர்களையும் பெயர் ஊர் கேட்க வேண்டுமென்று எனக்கு ஓர் ஆசை ரொம்ப நாளாக உண்டு. அவர்களைக் கேட்டால், கேட்ட வேலை போய் விடுமே!

‘ஊரைச் சொன்னலும் பேரைச் சொல்லக் கூடாது!’ என்று நாட்டுப் புறங்களிலே ஒரு வாசகம் சொல்வார்கள். ஊரையும் பேரையும் சொல்லர் தவர்கள், சொல்லப் பயப்படுகிறவர்கள் சமுதாய விரோதிகள் என்பது அடியேனின் ‘தைரியமான’ அபிப்பிராயம்.

பத்திரிகைகளிலே ‘கதைகளில் காணப்படும் பெயர்கள் கற்பனையே!’ என்று ஒரு குறிப்புக் காணப்படும். ஆனால் எனக்கென்னவோ, எங்கள் பகுதிகளிலுள்ள ஊர்களையும், பெயர்களையும் அப்படி அப்படியே உபயோகப்படுத்துவதிலே எப்போதுமே தணியாததோர் ஆசை. கதை எழுதவேண்டுமென்ற துடிப்பை உண்டாக்கியதே என் பிறந்த மண்தான். ‘பூவை’ என்று எனக்கு ஒரு புனைப் பெயர் சூட்டியவர் அமரர் கல்கி அவர்கள். அவர் பெயரிட்டி பாக்கியத்தால், இலக்கிய உலகிலே ஆறுமுகத்தை மறந்து விட்டார்கள். ‘பூவை’ யை