பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

167


'அண்ணு வாழ்க 1’ என்ற குரல்கள் விண்ணைமுட்டி எழும்பின அல்லவா ? அத்தனை குரல்களின் இதயங் கள் செய்த பிரார்த்தனைகளிள் நல்வாழ்த்துக்கள் அண்ணுவைக் காப்பாற்றிவிட்டன. திரு. அண்ணு துரை அறுபதாவது பிறந்த நாள் விழாவுக்கும் அவ் வாழ்த்தொலிகள் ஒரு புதிய சரித்திரத்தை ஏற்படுத்திக் காட்டிவிட்டன. டாக்டர் மில்லர் அவர்களை வாழ்த்தி வந்த செய்திகள் மிகுதியாம். வாழ்க்கை ஒரு விளையாட்டு. அவ்விளையாட் டின் மூலம் ஆண்டவன், அவனது நகல் மனிதன். மனிதனைப் படைக்கிருன் கடவுள். இது உண்மை. கடவுளைப் படைக்கிருன் மனிதன். இது பொய்யல்ல. கடவுளும் மனிதனும் அதாவது, இறைமைப் பண்பும் மனிதாபிமானச் சக்தியும் கூடியதே இம் மண் வாழ்வுக்கு-வாழ்வின் கூத்துக்கு முதல் வாழ்த்துத் தெரிவிப்பவன் ஆண்டவன். அதற்கு நன்றிக் கடகைக் கடவுளை வாழ்த்துகிருன் மனிதன். * அம்மையே..! அப்பா ! ஒப்பிலா மணியே!போதாதா புகழ் மாலைகள் ! அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் இறைவனின் சிறந்த திருவடிகளை இடைவிடாமல் நினைக்கின்றவர், இன்ப உலகின்கண் நிலைத்து வாழ் வார் !-கடவுள் வாழ்த்து’ என்கிற முத்ல் அதிகா ரத்தில் வள்ளுவம் இவ்வாறு செய்தி சொல்கிறது.