பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

169


இராதாகிருஷ்ணன், நேருஜி, இந்திராகாந்தி, காம ராஜ், ஈ. வே. ரா., ராஜாஜி, அண்ணுதுரை, எம். ஜி. ஆர்., சிவாஜி, எஸ். எஸ். வாசன், எஸ். ஏ. பி. என்று இப்படி ஏராளமான வாழ்த்துக்கள் வந்த இந்த விஷயத்தை இன்னமும் நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்ருல், வாழ்த்துக்களுக்குள்ள மகிமையை நீங்களே உணர்ந்து கொள்ள முடியும். நான் தம்பட்டமடித்துக் கொள்ள விரும்பாதன்ை என்னும் உண்மையை உணரவல்ல ஒவ்வொருவருக் கும்கட்டாயம் என்னுடைய வாழ்த்துக்கள் கிட்டும். வாழ்த்துக்கள் வய தைக் கூட்டும் என்பதாக தத்துவவாதிகள் குறிப்பிடுவார்கள். இதன் நிமித் தமே பிறந்த நாள் வைபவங்களும் நடக்கின்றன. இம்மாதிரியான பிறந்த நாள் விழாக்களை திரை யுலகப் பெண் நட்சத்திரங்கள் கொண்டாடும்போது அந்த அழைப்புக்களில் தங்களது பிறந்த நாள் விழா வின் எண்ணிக்கையைக் குறிப்பிட்டால் நமக்கெல் லாம் ஒரு புதிய செய்தி கிடைக்குமே ! திருமண வாழ்த்துப் பத்திரங்கள் இப்போதெல் லாம் 'ரெடிமேடாக அச்சடித்து விற்கப்படுகின்றன. இயம்பும் உவமைகளும் பொருள்களும் மங் (ت (آنتن گی கலம் நிறைந்தவை. கட்சிக் கண்ணோட்டமும் அடிச் சரடாக அமைவதும் விலக்கு விதியல்ல : பண்டைப் புலவர்கள் மன்னர்களை வாழ்த்தி, "வாழ்க நின் கொற்றம் ' என்று பாப்புனைந்து, பரிசு பெற்ற நடப்புக்களை நம் தமிழ் இலக்கியங்கள் எடுத்துக் காட்டும்.