பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

17

இடித்துத் தங்கள் ‘அறப்போர்’ திட்டத்தைத் தெரிவிக்கவும் தவறமாட்டார்கள்.

கதாசிரியர்கள் கிராமியக் கதைகளை எழுத நினைத்தால், உடனேயே அவர்களுக்கு ஒரு மாணிக்கத் தேவரின் தோள் கனமும், பரப்பளவு—சுற்றளவும்தான் நினைவுக்கு வரும். பட்டணத்துக் கதைகளிலே ஒரு மைனருக்கு தோளில் பாம்புபோல நெளியும் ஜரிகைத் துப்பட்டா இல்லாமல் இருக்க முடியுமா? தோளுக்குத் தோளாகப் பழகிய ஒரு கோவிந்தனும் ஒரு கோபாலனும் கடைசியில் தோள் தட்டி, மார் தட்டி குஸ்தி போடாமல் எந்தக் கதையாவது ‘டெம்போ’ பெறுவதை நீங்கள் பார்த்த துண்டா. கதையில் வரும் கதாநாயகனுக்கு அவனது தோளைத் தட்டிக் கூப்பிட்டால்தான் சுய நினைவு வரமுடியும்! சரித்திரக் கற்பனை என்றால், கதாநாயக ராஜாவுக்கு ஒரு ‘ஜே’யும் இரண்டு பராக்குப் போடுவதற்கு முன்பு, அவனுடைய தோளை அலங்கரித்திருக்கும் அணி வகைகளை வர்ணிக்கும் அழகே அலாதியானதாகும்!

‘தோள் விடு தூது!’ என்ற தலைப்பில் ஒருவர் கதை எழுதியனுப்ப அது 'தேள் விடு தூது'ஆக அச்சுவாகனம் ஏறிய விந்தையும் தோளுக்குப் புகழ் தேடித் தருகின்ற ஓர் அதிசய நிகழ்ச்சியன்றோ?

பரிசல் பெற வரும் கவிகள் அந்நாளில் அரசர்களது தோள்களைப்பற்றி முதலில் வர்ணித்துவிட்டுத் தான் மறு ஜோலி பார்ப்பார்கள்; அரசர்கள் க்ஷத்திரியரிகள், பாருங்கள்—அதற்காகத்தான்!