பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



19

‘குன்றினும் உயர்ந்த தோளான்’ என்றும் தோளின் புகழ் பாடுகின்றனர் தத்தனாரும், கம்பரும் !

இனி பாரதியாருக்கு வருவோம்; பாரத தேசத்தின் பெருமைகளைப் பாடிய கவிஞர் ‘எங்கள் பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்’ என்று முடிக்கின்றார். ’வலிமையற்ற தோளினாய் போ, போ’ என்று போகின்ற "பாரதத்தைச் சபிக்கும் அதே புரட்சிக் கவி, ‘கடுமை கொண்ட தோளினாய் வா, வா’ என்று வருகின்ற பாரதத்திற்கு வாழ்த்துக் கூறவும் தயாராயிருக்கின்றார்! இது மட்டுந்தானா? ‘நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்!’ என்றும் அல்லவா ஓம் சக்திக்கு அஞ்சலி செலுத்துகிறார்!

‘ஆறிரண்டு தோளான்’ என்பது ஆறுமுகனுக்கு ஒரு காரணப் பெயர்.

தன் தோழி தலைவனது பிரிவை உணர்த்திய காலை, அவள் குறிப்பாகச் செய்த செய்கையைப் பாடும்போது ‘வான்மறை’ கூறும் வரிகள்:

“தொடி நோக்கி மென்றோளும் நோக்கி அடி நோக்கி
அஃதாண்டவன் செய்தது.”

அடடே, தோளைப்பற்றிச் சொல்ல இத்தனை விஷயங்கள் கிடைத்து விட்டனவே! தோளே, நீ சிரஞ்சீவியாக வாழக் கடவாயாக?