பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கரும்புப் பொங்கல்

தர்மத்தையும் சத்தியத்தையும் சோதித்துப் பார்க்க முனைந்தார்கள் நம் பகைவர்கள். அவர்களின் மண் வெறியை மண்ணைக் கவ்வச் செய்தோம் நாம். அவர்கட்கு வெறி தொடர்ந்தால், நமக்கு வெற்றி தொடரும்! ஆகவே, இந்தப் பொங்கல் தர்மப் பொங்கல்! இன்று மட்டுமல்ல. என்றென்றும் இப்புனித நினைவுகளின் கோயிலாக நம் தாய் மண் திகழும்!

உண்மைதான்; நம் தர்மம் வென்றது! அதற்கு உதாரணமாக, ‘தாஷ்கண்ட் ஒப்பந்தம்’ நிலைத்து விட்டது! இந்நிலையே நாம் அமரர் லால்பகதூர் அவர்கட்குச் செய்ய வேண்டிய அஞ்சலியாகும்!

பழையன கழிந்து. புதியன புகுதல் மரபு. இம் மரபின் சரித்திரத்துக்கு ஒரு புதிய நோக்கமாகவும்,