பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

23

வாலிபப் பிராயத்தில் கரும்புவில்காரன் விளையாடத் தொடங்குகிறான். “ஆல் இக்கு வில் வேள்” என்கிறார்கள். மன்மதனை-வருண குலாதத்தின் மடலில். விடம் செய்யவல்ல கரும்பினையுடையவன் வேழமதன். கரும்பின் சின்னம் என்றால், உடனே காதல் விளையாடத் தொடங்கிவிடுமன்றோ!

அளப்பரிய நிதி பெற்றிருந்த பட்டினத்தாருக் குக் “காதற்ற ஊசியும் வாராது காண், நிற்க கடை வழிக்கே!” என்ற வாழ்வின் உயிர்த் தத்துவத்தைப் புரிந்துகொள்ளும் சக்தியை சக்தி அருளியபின், அப் பட்டினத்தடிகளிடம் ஒரு பேய்க் கரும்பினைக் கொடுத்து, “அப்பேய்க் கரும்பு எவ்வூரில் இனிக்கிறதோ அங்குதான் அவருக்கு மோட்சம்” என்று அருளிய அவ்வுண்மைக்கு ஒரு நிதர்சன உதாரண மாக நிலவியது கரும்புதானே?

‘இது வாழ்விற்கு அமைந்திட்ட முடிவுக் கட்டம்!’

கரும்பு, என் கதைக் காதலர்களிடையே கொண்டிருந்த முக்கியம் கொஞ்சமல்ல; நஞ்ச மல்லவே!

இதோ அவர்கள் பாடுகிறார்கள்; பட்டிக் காட்டுக் காதல் பாட்டு! “ட்யூன்” போட்டுப் பாருங்கள்! செங்கரும்பாக இனிக்காதோ? என் பாட்டாயிற்றே?