பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



25

பெருமாள் என்பதையும் உணர்ந்தான் பாண்டியன். மன்னிப்பை யாசித்தான்.

விஷ்ணு ஆலயங்களிலே பூஜைப் பொருள்களிலே கரும்பும் ஒன்றாக அனுஷ்டிக்கப்படுகிறது.

“நிலத்துக் கணியென்ப நெல்லும், கரும்பும்” என்கிறது நான்மணிக்கடிகை. நெல் நம் உயிருக்கு கரும்பு நம் உயர்வுக்கு. கரும்பு இல்லாவிட்டால், நாம் வெல்லம் போல எப்படிப் பேச முடியுமாம்?

“இறைமைச் சக்தியை அனுபவித்து மகிழும் மனப் பிணைப்புக்கு ஏற்ற பான்மையினை கரும்பினின் சாறு போலப் பருகினோற்கு இனியவாறே!” என்று குறிக்கிறது நாலாயிரத் திவ்யப் பிரபந்தம்.

நகரங்களிலே கரும்பைச் சாறு பிழிய ஒரு சக்கர வண்டி நிற்கும். சாறு பிழிந்து, எலுமிச்சை பிழிந்து, ஐஸ் போட்டுக் கொடுப்பார்கள். சும்மாவா? விலைக்கு! அது கிடக்கட்டும்.

நான் சும்மா ஒரு கிளாஸ் கரும்புச் சாறு தரட்டுமா?—பருகுங்கள்! இதோ!

“வான்கலந்த மாணிக்கவாசக! நின் வாசகத்தை
நான்கலந்து பாடுங்கால் நற்சருப்பஞ்சாற்றினிலே
தேன் கலந்து பால்கலந்து செழுங்கனித்தேஞ்சுவை

–கலந்து ஏன்


ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல்

–இருப்பதுவே!”