பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



26

தெய்வத்தைக் கரும்பாகவும், கரும்புச் சாறாகவும் உவமைப்படுத்திப் பாடப்பட்டுள்ள பாடல்கள் கணக்கு வழக்கில் அடங்கமாட்டா.

இதை ஒட்டியோ என்னவோ, கரும்பு தாசக் காதலர்கள் தங்கள் காதலிகளைக் கூச்சமில்லாமல் “கரும்பே!” என்று கூப்பிடவும் பழகிவிட்டார்கள்!

வரப்போகும் தேர்தலிலே தங்களுக்கு அடையாளம் கிடைக்கவில்லையே என்று யாருமே கவலைப் படத்தேவையில்லை. பேசாமல் கரும்புச் சின்னத்தை கொடுத்துவிட்டு, பேசாமல் இருக்கலாம்?—மன்மத தாசர்கள் என்ன, பட்டினத்தார் தாசர்கள் என்ன அவரவர்கள் தங்கள் தங்கள் சின்னத்துக்காக வெற்றி தேடிக்கொடுக்க இரவும் பகலுமாய்ப் பாடுபட்டே தீருவார்கள்! உடனே “வாழ்க கரும்பு!” என்னும் ஜெய்கோஷங்கள் விண்ணில் புறப்பட்டு வரத் தொடங்குவதை சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள் முன்கூட்டியே எதிர்பார்த்து மனப்பால் குடிக்கலாம்!— இந்தப் பால் இனிக்காமல் தப்பாது!—சர்க்கரையை கொஞ்சம் அளவுக்கு மிஞ்சிப் போட வேண்டும்!—அவ்வளவுதான்!...

பொங்கலின் நினைவுகள் எங்கேயோ தொடங்கி எங்கேயோ போய் நிற்கின்றனவே!

பொங்கலுக்கு ஓர் ஆரம்பத்தையும் ஒரு முடிவையும் தர முயன்ற கரும்புக்கு என் வாழ்த்துக்கள் எப்போதும் உரியவையாகட்டும்!

வாழ்க, கரும்பு?...

—★—