பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

31


காட்டிலும் அப்பொழுது எனக்குக் கெட்ட கோபம் பொத்துக் கொண்டு ஓடோடி வந்தது. சிணுங்கல் அழுகையை அளவாக வெளியிட்ட நான் திரும்பவும் தலையணையில் முகம் பதித்து குறட்டை ஒலிகளை மனை முழுதும் பரப்பிய நிகழ்ச்சிகள் இன்னமும் என்னுடைய 'மன டைரி'யில் பச்சை மையால் எழுதப்பட்டவை மாதிரி பசுமை கொண்டு திகழ்கின்றன; மேலைநாட்டுக் கவி ‘வோர்ட்ஸ் வர்த்தை'ப் போல நானும் ஏன் இவற்றையெல்லாம் பாடலாகப் புனைந்துரைக்கக் கூடாது?

பெற்றவளின் கண்ணீர்க் காணிக்கைக்கு மதிப்புத் தந்து அப்பாவும் எனது தனிப்பட்ட தூக்க விஷயத்தில் தலையிடாமல் ஒதுங்கி விடலானார்; ஆகவே, அதிருஷ்ட வசமாக, 'வைகறைத் துயிலெழு!' என்ற மணிவாசகமும் என் நிழலை அண்டப் பயந்து விட்டது.

ஊர் விட்டு ஊர் சென்றேன்; என்னுடன் கூடவே இந்தப் பரீட்சைகளுமா துப்பறியும் நாய்கள் போலப் பின் தொடர வேண்டும்? எஸ். எஸ். எல். ஸி, இண்டர், தேர்வுச் சோதனைகளிலே மேற்படி மூத்தோர் மொழியை அவ்வளவாக நான் கருதாமல் இருந்தாலும், பி.ஏ. பட்டப் பரீட்சையின் போது மாத்திரம் அந்தப் பாட்டு என்னை வட்டியும் முதலுமாக சேர்த்துப் பாடாய்ப் படுத்தி விட்டது. அந்தப் பாடலைப் படித்து அனுபவிக்கும் சூழலோ, அமைதியோ அந்நாட்களில் வாயக்காமல் இருந்தாலும், பட்டத்தின் அவசியம் என்னுள்