பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$ $ விடப் பிரயத்தனம் செய்தால், வாய் பேசத் தெரிந்தும்-ஆனல் வாயடைக்கப்பட்ட கடியாரத் துக்காகவும், வாய் முடி மெளனிகளாம் தலையணைப் புத்தகங்களின் சார்பிலும் நண்பர்கள் வந்து என்னுடைய உறக்கத்துடன் மல்லுக்கு நிற்கத் தலைப்பட்டு விடுவார்கள். கூஜாவிலிருந்து தண்ணீர் எடுத்து என் முகத்தில், குறிப்பாக என் அருமைக் கண்ணில் விசிறியடிப்பார்கள். ஆனல் அந்தத் தண்ணிர் என் நெற்றி மேட்டில்தான் விழுந்து சிதறும். ஒரு சமயம், நான் நெற்றிக் கண்ணேத் திறந்து அவர்களை எரித்து விடுவேனே என்ற பயமோ என்னவோ, நான் ஏதும் அறிந்ததில்லை! இராமங்களில் வேப்பிலே வீசி பேய் பிசாசு விரட்டுவது மாதிரி இருக்கும் அந்தக் கண் கொள்ளாக் காட்சி: ஹாம்; அத்துடன் நின்று விடுவார்களா தோழர்கள்? பிளாஸ்கில் இருக்கும் சூடான சாயாவை கிளாஸில் ஊற்றிக் கொடுப்பார் கள். ராஜா ராணி சினிமாப் படங்களிலே எழில் நிரம்பிய கோப்பையில் உயிர் குடிக்கும் விஷத்தை நிரப்பிக் கொடுத்த கட்டம்தான் என் மூளையில் மோதி நிற்கும்; எல்லாம் முடிந்து புத்தகத்தைப் பிரித்தால், அச்செழுத்துக்கள் என்னுடைய தலை யெழுத்தைப் போலவே என் ஊனக் கண்களுக்கு புலப்படவே மாட்டா: 'இனியும் தூங்காதே, மாக்பெத் தூக்கத்தைக் கொலே செய்!” என்று வீர முழக்கம் செய்து கொண்டிருந்த ஷேக்ஸ்பியரின் இதய ஒலி என் காதுகளுக்கு எவ்வாறு எட்டி யிருக்கக் கூடும்? ஆனலும் இயற்கையின் இரண்