பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39


ஒருவரையொருவர் காணுமலேயே, அவர்களுக் காகக் காதல்தான் காத்துத் தவம் கிடந்தது. அதிசயமாக இருக்கிறதா?-ஆமாம்; அவர்கள் இருவரும் அத்தை மகள்-மாமன் மகன் முறை கொண்டவர்கள். இந்தப் பொய் உலகில் ஜனனம் எடுத்த சடுதியிலேயே, அவர்களின் நிஜமான காத லும் பிறந்துவிட்டதை, மேற்படி குழந்தைகள் அறிந்தனவோ, இல்லையோ, அவர்களுடைய இரு தரப்புப் பெற்ருேர்களும் தெரிந்து வைத்திருந்தார் கள். அதன் பலளுக, அவர்களுக்குக் கல்யாணம் நிச் சயமாகியது. அதற்கு முத்திரை வைத்தாற் போன்று, திருமண அழைப்புக்களும் தயாராயின. நாள், நட்சத்திரம், சாத்திரம், சூத்திரம், சொந்த பந்தம் போன்ற கேள்விகள் மூன்ரும் மனிதர்களால் கேட்கப்படுவதற்குச் சந்தர்ப்பம் கொடுக்க விரும் பாதவர்களாக, சகல புள்ளிவிவரங்களையும் நறுவி சாகக் குறித்தார்கள். உற்றவர்கள், நட்புக்கு உகந்தவர்கள் எல்லோருடைய பெயர்களையும் எழுதி அவர்கள் அனைவருக்கும் அழைப்புகள் கொடுக் கப்பட்டன. அஞ்சலில் இந்தச் சுபச் செய்தியை அஞ்சல் செய்யவும் தவறவில்லை. இப்படிப்பட்ட சம்பிரதாயபூர்வமான கட்டங்களினின்றும் சற்றே எட்டி நின்று, ஒர் அதிசயச் சம்பவம் நடந்தேறி யது. அது என்னவென்று உங்களுக்குப் புரிகிறதா? சரி; நானே சொல்லி விடுகிறேன். மணமகன் கையில் மன மகள் ஒர் அழைப்பை நீட்டினள். அதே கணத் தில், மணமகளிடம் மண மகனும் ஒரு திருமண மடலைக் கொடுத்தான். இருவருக்கும் ஓர் அரைக்