பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

ததுபோல், உறைமீது இருந்த என் பெயரை அவர் வெட்டவும் இல்லை; மற்றவர் பெயரை ஒட்டவும் இல்லை. அதற்குப் பதிலாக, அழைப்பைப் பிரித்து என் கண்களிலே ஒற்றினர். அசந்துவிட்டேன் நான். ஊம்! என்னுடைய மாண்புமிக்க தலைமையின்கீழ் அவரது வதுவை விழா நிகழ்வதாக அச்சாகியிருந்தது. ‘சிவனே’ என்று கல்யாணப் பிரசங்கத்தை எழுதி மனப்பாடம் செய்து ஒப்பித்ததும், இந்த மாப்பிள்ளை புனைந்த முதல் கதையை அடியேன் தான் முதன்முதலாக வெளியிட்டேன் என்பதும் சொந்த விஷயங்கள்!

தமிழ் இனம் விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்றதென்பது இலக்கிய பூர்வமானதொரு உண்மை. இத்தகைய விருந்துபசாரத்துக்கு அடித்தளம் பரப்புவது திருமண அழைப்பு அழைத்த வீட்டுக்குத்தான் யாரும் வருவார்கள். மனத்தையும் மாற்றிக்கொண்டு, உற்ற நண்பர்கள் இரண்டு மூன்று பேர்களையும் அழைத்துச் சென்று பதிவு நிலையத்தில் மாலைகளை மாற்றிக் கொள்பவர்களுக்கு வேண்டுமானல், திருமண அழைப்பு அச்சடிக்கும் பணம் மிச்சமாகலாம். ஆனால், பெரும்பாலான வர்கள் திருமண அழைப்பு விஷயத்தில்தான் அதிகப் படியான கருத்துப் பதிப்பது வழக்கம்.

சாதாரணமாக, ஒருவரின் வீட்டைப் பார்த்தால், அவரது இருப்புப் பெட்டகத்தின் நிலைமையை அனுமானம் செய்துகொள்ள முடியும். அதை ஒப்பத்தான், திருமண அழைப்பின் தரத்தை