பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எடை போட்டால், நடைபெறும் மணவினையின் ஆடம்பரத்தைப்பற்றியும் கோலாகலத்தைக் குறித் தும் நாம் அளவிட்டு விடலாம்.

அந்தக் காலத்திலே மோதிரத்தில் அடக்கி விடக்கூடிய அளவுக்கு அவ்வளவு, மெல்லியதாகத் துணியை நெய்து தயாரித்தார்களாம். அது சரித் திரக் காலம்! இந்த நாளிலோ, முன்மாதிரி மோதிரங்களில் அழைப்புக்களைத் தூது அனுப்ப வேண்டியது ஒன்றுதான் பாக்கி. மற்றபடி, அழைப்புக் களே தயாரித்துவிடும் கலையில் பற்பல வகைகள் அனுசரிக்கப்பட்டு வருகின்றன. வண்ணக் காகிதங் களிலிருந்து வனப்பு மிக்க துணிமணி வகை வரை சகலமான தினுசுகளிலும் திருமண அழைப்புக்கள் அச்சாகின்றன. ஒவ்வோர் அழைப்பிற்கும் ஒவ்வொரு தனிப்பேழை செய்து அழைப்புக்களே அனுப்பி வைக்கின்றனர் நிதிமிகுந்தவர்கள்.

இந்நிலையை எண்ணும்போது, பண்டைச் சரித்திரம் நம்முன் ஏடு புரள்கின்றதல்லவா? அரண்மனைகளிலே காதல் விளையாட்டு ஒரு ரகம். சுயம்வரம் இன்னெரு வகை. எல்லாம் ஒருபுறம் இருந்தாலும், ஐம்பத்துஆறு தேசத்து ராஜாக்களுக்கும் அரசாங்க முத்திரை, கொடி தாங்கிய முகூர்த்த ஒலைகள் கொண்டு சேர்க்கப்பெறும் செல்வாக்கே தனித்தன்மைகொண்டு விளங்கியது. இதைக் காலமும் நூலும் எப்போதும் மறக்கவோ, மறைக்கவோ இயலாது.