பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அலுவலகத்துக்குப் புறப்பட என்னேத் தயார்ப் படுத்திக் கொண்டிருந்தேன். அம்பிப் பயலைக் கூப் பிட்டு மணி என்னவென்று பார்த்து வா’ என் றேன். மணி பார்க்கத் தெரியாது' என்ருன் அவன். சரி, சின்ன முள் எதிலே இருக்கிறது, பெரிய முள் எதிலே இருக்கிறது என்று பார்த்து வா' என்று ஆலோசன்ை சொல்லி அனுப்பினேன். அவன் திரும்பி வந்து, சின்ன முள்ளும் பெரிய முள்ளும் கடிகாரத்துக்குள்ளேதான் இருக்கிறது!’ என்ற பெரிய ரகசியத்தை என்னிடம் சொன்னன்.