பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

நம் வாழ்க்கையில் மட்டுமல்லாது, புராணகாலத்திலும்கூட இந்த முட்கள் மிகுந்த பெருமைபெற்றிருக்கின்றன.

அஞ்சன வண்ணனை ஶ்ரீராமபிரான் கானகம் செல்ல ஆயத்தமானபோது தானும் உடன் வருவ தாகச் சீதாதேவி கூறுகிறாள். அது கண்டு தசரத ராஜகுமாரன் மனைவியை நோக்கி, “நான் செல்லும் இடம் கல்லும் முள்ளும் மண்டிய ஆரண்யம்!” என்கிறான். அதுகேட்ட ஜனககுமாரி, “நீங்கள் செல்லும் இடம் எதுவானுலும் அதுவே எனக்கு சொர்க்கம்; அதுவேதான் எனக்கு அயோத்தி!” என்கிறருள். கடைசியில், மனையாட்டியையும் அழைத்து ஏகுகிறான் தெய்வ மனிதன்.

இலக்கியத்திலே காதற் சுவையிலும் ‘முள்’ அங்கம் வகிக்கிறது. சகுந்தலேக்குக் காலில் முள்தைத்து விடுகிறது; அப்பொழுது எதிர்ப்படுகிருன் துஷ்யந்தன். “முள் எடுக்கும் பாவனையில் முறுவல் நகை பூக்கின்றாள் சகுந்தலை!” முள் இல்லையேல், இங்கே காதல் பிறந்திருக்க முடியாது.

ஊசி முனையில் உமையவள் தவம் செய்ததாகச் சொல்வதுண்டு. முள் முனையில் அப்படித் தவம் செய்ய ஏனே முனையவில்லை, பார்வதி தேவி. முள் முனையில் ஒரு பிரகஸ்பதி மூன்று குளம் வெட்டிய தாக ஒரு நாடோடிக் கவிதை உண்டு!

முள்ளே ஒதுக்க முள் வாங்கி தாற்காலிகச் சாதனமாக அமையலாம். ஆனல், இந்த முள்