பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

53

கதையைச் சொன்னுல்தானே பாவம், உங்களுக்கு விஷயம் புரியும்?

ஒரு சமயம் பட்டினத்துச் செட்டியார் மாபெரும் செல்வச் சீமானக இருந்தும் குழந்தைச் செல்வம் இல்லாத பெருங்குறையைத் திருவிடை மருதுரர் பெருமான் சந்நிதியிலே விண்ணப்பித்துக் கொண்டார். உடனே அவருக்கு சிவசருமர் வாயிலாக ஒரு குழந்தை கிட்டிற்று. அதற்கு மருதபிரான் என்று நாமகரணம் செய்வித்து வளர்த்து வந்தார். அப்பிள்ளை பெரியவனாகி, கடல் கடந்து வியாபாரத்துக்குச் சென்ருன், மீண்டான். அவன் கப்பலில் கொணர்ந்த வற்றில் வெறும் வராட்டியும் எருவுமே மூட்டை முட்டை யாக இருக்கக் கண்ட பட்டினத்துச் செட்டியார் ஒரு விரட்டியை எடுத்து வெஞ்சினம் பறக்க வீசி எறிந்தார். அவ்விரட்டி உடைந்து ஒளிமிக்க நவரத்தினங்களாகச் சிதறியது. தவுட்டு முட்டையெல்லாம் பொன்னுய் மாறியது. பட்டினத்தார் வீடு வந்தார், மாருத திகைப்புடன் ஆளுல் அங்கே அவரது திகைப்பு மேலும் வளர்ந்தது. காரணம் அங்கே அவர் மகன் காணப்படவில்லை. குமாரன் கொடுத்ததாகச் சேர்ப்பிக்கப்பட்ட சிறிய பெட்டியில் காதற்ற ஓர் ஊசியும், ஓர் ஒலச் சீட்டும் இருந்தன. ஓலே நறுக்கிலே, “காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே!” என்றிருந்த வாசகம் அவருக்கு அறிவு நிலையினை உணர்த்தியது. பற்றற்ற துறவியானர். அளப்பரிய செல்வம் படைத்த

த. த. க-4