பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

பட்டினத்துச் செட்டியார் பட்டினத்தடிகள் ஆளுர், இந்த ஊசியை-அவர் அதாவது, காதற்ற ஊசியை மறக்க மாட்டார். அவரை இவ்வாறு ஆக்கிய தெய்வம் அவர் மகன்!

ஆனால், எனக்கென்னவோ இந்தக் காதற்ற ஊசியில் துளிக்கூட பற்று இருப்பதில்லை. ஏன், காதுள்ள ஊசி என்ருல்கூட எனக்கு அவ்வளவு ஈடுபாடு கிடையாது!-ஏனென்றால், மூன்று காசை நீட்டினுல், டஜன் கணக்கில் ஊசியும் டஜன் கணக்கில் வெகு சமீபத்திய சினிமா பாட்டும் கொடுக்க நரிக் குறத்திகள் இருக்கும்போது எனக்கு இந்த ஊசியில் உணர்வு எப்படிப் பிறக்க முடியும்? நீங்களே சொல்லுங்கள்!

ஊசி குத்தினால் உணர்வு இருக்கும். ஆனால், உணர்வு உண்டாகக் கூடாதே என்றுதான் டாக்டர்கள் ஊசி குத்துகிறார்கள்—அதாவது, “இன்செக்க்ஷன்” போடுகிறார்கள்!—பெரிய ஆபரேஷன் என்றால் , அவர்கள் மட்டும் இந்த ஊசி விஷயத்தில் “ரேஷன்” செய்வது கிடையாது!

ஒரு நடப்பு என்ன தெரியுமா?

வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுகிற மாதிரி சிலர் “நைசாக” பேசுவார்கள். அவர்கள் இம்மாதிரி டாக்டர்களாகத் தான் இருக்க வேண்டுமென்று சாஸ்திரம் ஏதும் இல்லையே!

ஊசியும் காலும்போல வாழ வேண்டுமென்று நான் ஒரு புது மணத்தம்பதிக்கு வாழ்த்துக் கடிதம்