பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

55

அனுப்பி வைத்தேன். அந்தத் தம்பதியின் நாயகன் ஒரு தையற்காரர். ஊசியும் நூலும் எவ்வளவு முக்கியம் என்பதை அனுபவ பூர்வமாக உணர்ந்து கொள்ளும் ரீதியில் “காஜா” எடுக்கும் பதவியிலிருந்து உயர்வுபெற்ற மாப்பிள்ளை அந்த டைலர்! —மேலும், ஒருமுறை என் அகிலாண்டம் ஊசியில் நூலைக் கோர்த்துத் தரும்படி சொல்லப்போக, நான் பட்ட கஷ்டத்திலிருந்து ஊசிக்கு நூலின் நிலையும் புரிந்திருந்தது. ஆகவேதான் அப்படி வெகு இயல்பாக எனக்கு வாழ்த்தத் தோன்றியது! ஓடிக்கொண்டே ஊசியில் நூலை நுழைக்கும் விளையாட்டில் வல்லவளாம் அந்த டைலரின் மனையாட்டி!

ஜோடிப் பொருத்தம் இப்படியல்லவா அமைய வேண்டும்! ......

காதுள்ள ஊசியால் கிழிசலைத் தைக்கிறோம்.

காதில்லாத ஊசியால் கதை பேப்பர்களே ‘பின்’ பண்ணுகிறோம். வாயாடிகள் யாராவது இருக்கும் பட்சத்தில் அவர்கள் வாய்களைத் தைத்து விடவும் இந்த ஊசியும் உதவும்! இது என் யோசனை மட்டுமல்ல! ஆகவே இதனால் உண்டாகும் பின் பலாபலனுக்கு நான் ஜவாப்தாரியல்ல!

ஆபீசர் வந்துவிட்டால், அங்கு ஒர் ஊசியைகுண்டுசியை போட்டுப் பாருங்கள்! அங்கு குண்டூசி விழுந்த சத்தம் கேட்டால், அங்குள்ள ஆபீஸரின் கெடுபிடித்தன்மையை நீங்கள் உணர்ந்து கொள்ள முடியும்!