பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

அந்த நாளிலே கைதிகளின் நகக் கண்களில் ஊசி செலுத்தும் ஒருவகைத் தண்டனையும் இருந்த தாம், உங்களுக்குத் தெரியுமா?...அடடே, கோபித் துக்கொண்டு விடாதீர்கள், ஐயா!”

ஊசி முனையில் தவம் செய்தார்களாம் அர்ஜுனனும் பார்வதியும் புராணத்திலே!

இந்த நாளில் ஊசியை விழுங்கவே தெரிந் திருக்கிறதே நம் பிள்ளைகளுக்கு சாதாரண குண்டுசியை ஒரு குழந்தை விழுங்கி விட்டதாம்: நிலை மோசமாகியதாம்! உடனே வேளாங்கண்ணித் தெய்வத்துக்கு “நேந்து” கொண்டவுடன், அவ்வூசி வெளியேறியதாம். அங்கே மாதா கோயிலில் இதற்கு நிரூபணமாகப் புகைப்படங்கள் இருக்கின்றன.

தங்க ஊசி என்றால் அதற்காகக் கண்களில் குத்திக் கொள்ளமாட்டேன் நான்!

உங்கட்கு ஓர் இதோபதேசம் செய்யலாமா, இலவசமாக!— உங்களுக்கு ஆபீசில் கொறிக்க பட்டாணி, ஒமப் பொடி, வைத்திருங்கள். ஆளுல் ஒமப்பொடி பட்டாணி ஞாபகத்தில் ஆபீஸ் குண்டுசிகளை மட்டும் வாயில் போட்டுக் கொண்டு விடாதீர்கள்! என் யோசனை உங்களுக்கு அலட்சிய மாகப் பட்டால், அப்புறம் உங்கள்பாடு, அந்தக்குண்டுசிகளின் பாடு!...

கதைகளிலே ஊசிப் பார்வை செலுத்துவார் கள் வில்லன்கள். இவர்களைத் திரையிலும் தரிசிக்க