பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

57


லாம். இவர்கள் ஊசி மிளகாய் சாப்பிட்டிருப்பார்கள். அல்லது ஊசிப் பட்டாசு விட்டவர்களாகவும் இருக்கக்கூடும்!

கோணி ஊசி, இந்த ஊசி இனத்திற்கு சீனியர்!

கொண்டை ஊசியையும் சீப்பையும் கொண்டையில் அப்படியே வைத்துக் கொள்வார்கள் பர்மியப் பெண்கள். இங்கே நம் பெண்கள் கொண்டை ஊசியை ரகசியமாகத்தான் உபயோகப்படுத்துவார்கள். ஏனென்றால், நரிக் குறத்திவிற்கும் சாமானல்லவா? ஆனால் கொண்டை ஊசி, கைகொடுக்காவிட்டால் இந்த நாகரிகக் குஞ்சுகளை துளியும் சட்டை செய்யாது அவர்களது தலைமுடிகள் என்பதை மட்டும் அவர்கள் மறந்து விடுவார்கள்!

உணர்வு உள்ள மட்டும் ஊசியின் உணர்வும் இருந்துதான் தீர வேண்டும்!

—★—