பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68


பெரிய மனிதர்களில் ஒன்றிரண்டு பேர்வழிகள் எடுத்ததற்கெல்லாம் தங்கள் திருவாயைத் திறந் தால், எங்கே தம் பெரிய மனிதத்தன்மை மாற்றுக் குறைந்துவிடுமோ என்று பயந்து சிரிப்பு விஷயத் தில் ரொம்பவும் கட்டுச் செட்டாக இருக்கப் பிரயத்தனப்படுவார்கள். ஆனல் அவ்விதம் அவர் கள் சிரித்தாலும், சிரிக்காவிட்டாலும், உலகம் அவர்களைக் கண்டு கட்டாயம் கைகொட்டி எள்ளி நகையாடும் என்பது மட்டும் நிச்சயமே! சிரி உலகம் உன்னேடு சேர்ந்து, சிரிக்கும்!’ என்கிருரே ஆசிரியர் எல்லா வீலர்! இப்போது நாட்டிலே சிரிப்பு ஒன்றுக்குத்தானே ரேஷன் இல்லை! சிரிப்பின் வளர்ச்சிக்குத் தொண் டாற்றும் வகையில் கலைவாணர் என். எஸ். கிருஷ் ணன் போன்றவர்கள் சமூக ஊழியர்கள் என்ருல் நீங்கள் சிரிக்கத்தான் சிரிப்பீர்கள். அவர் கடன் களிப்பூட்டுதல்...! நாம்தான் அவருக்குக் கடன் பட்டவர்கள்-நாம் சிரிப்பதால், நமக்குச் சிரிக்கத் தெரிவதால், நம்மால் சிரிக்க முடிவதால்-! உல கின் துன்பத்தையும், மாந்தரின் பொய்க் கவலைச் சுமையையும் ஒரு நொடியேனும் போக்க உதவு பவன் போற்றப்படவேண்டியவன். கொள்ளைச் சிரிப்பினிலே; கொட்டிடுவாள் தேனமுதம் வெள்ளைக் குதலைமொழி விந்தைபல செய்யுமம்மா!'