பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& என்று அவர்கள் நினைத்திருப்பார்கள். ஆனல், இப்படிப்பட்ட அதிசயம் மீண்டும் எங்கே நிகழப் போகிறது என்கிற ஆச்சரியத்தில் நான் அந்த அதிசயமான அழகைப் பார்த்து ரசித்த உண்மையை அவர்கள் எவ்விதம் உணர முடியும்? கப்பல் இப்படி வந்து 'அழுச்சாட்டியமாக நின்று தொலைத்து விட்டதே யென்று கப்பல்காரர்களுக்குக் கவலை ஏற்பட்டிருப்பது சகஜம்தானே? வங்கக் கடலுக்கும் தமிழகப் புயலுக்கும் இருந்துவரும் சொந்தம் வரலாற்றுப் புகழ் கொண்டது. சென்ற மாதத்தின் புயலின் கொடு மையையும் செய்தித் தாள்கள் மறந்துவிட முடி யாது. புயலிடைத் தத்தளித்த ஜனங்களையும் சாமான்களையும் கண்டு தத்தளித்து உருகிய பொது ஜனங்களையும் வரலாறு நினைவிற் கொள்ளும். ஏற்கெனவே விரிசல் கண்டிருந்த ஒரு கப்பலே இப்போது வீசிய புயல் இரண்டாகப் பிளந்து கோட்டைக்கு எதிரே ஒரு கண்காட்சியையே அமைத்துவிட்டது. இந்தப் பிளவுக் கப்பலேயும் தரை தட்டிய அந்தக் கப்பலேயும் காண ஜனங்கள் ரசிகத்தன்மையுடனும் அனு தா ப உணர்வுடனும் வந்து குமுழுவதைக் கண்டு, ஒரு சின்ன பர்மாபஜார்கூட உருவாகிவிட்டதென்ருல், இக் கண்கொள்ளாக் காட்சிக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய மகத்துவத்தை என்னவென்று சொல்வது? புயலுக்கு இலக்கான கப்பல்கள் பின்வருமாறு: