பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74


நிலையிலுங்கூட நாமெல்லாம் சிரிக்கப் பழகிக் கொள்ளவேண்டும். உள நூல் இப்படிச் சொல்லு கிறது. பார்க்கப்போனுல் சிரிப்பது ஒரு கலை என்று தான் சொல்லவேண்டும். மனம்விட்டுச் சிரிக்க வேண்டும். விளக்கெண்ணெய் புகட்டியதற்காக அழும் குழந்தை, சர்க்கரை சாப்பிட்டதும் உடனே சிரிப்பதுபோல, இன்றைய இரவின் இருட் துயரில் நாளை உதயமாகும் நம்பிக்கை ஒளியை எண்ணிச் சிரிக்கவேண்டும். ஹாஸ்யம்-சிரிப்பு, தூய்மையான ஒர் ஆனந் தம்' என்கிருர் பூரீபிரகாசா. போட்டோ எடுத்துக்கொள்ளப்போனல் ஸ்டுடி யோவில், ஸார், கொஞ்சம் லேசாகச் சிரியுங்கள் என்கிருன் காமிராக்காரன். சினிமா ஸ்டுடியோவில் நம் நடிகைகளிடம் சிரிப்பை வரவழைப்பதற்கு, கண்ணிரைக் காணிக்கை செலுத்தித் தவம் கிடக் கும் டைரக்டர்களைப் பற்றிய கதையை நாம் அறிய மாட்டோமா, என்ன? பத்திரிகைகளில் டால்: அடிக்கும் சோப்பு விளம்பரங்களில் கோலப் புன்னகை குருத்துவிட நம் நட்சத்திரங்கள் காட்சி யளிக்கிரு.ர்கள் நம் புன்னகைக்குப் பரீட்சை வைப் பதுபோல. இவர்கட்கெல்லாம் ஏன் நம் அரசாங்கச் சார்பிலே கார்ப்பரேஷன் ஸ்டேடியத்தில் சிரிப்புப் போட்டி வைக்கக்கூடாது. அண்மைப் புயல் நிவார் ரணத்துக்காகிலும் பணம் சேருமே! அதைவிட, அவர்களது பூங்கரங்கள் கிரிக்கெட் மட்டை பிடிக் கும் தலையெழுத்தும் மாறிவிடும்; எக்ஸிபிஷனில்