பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குப்பைக்கு ஒரு கும்பிடு! நான் சொல்வதெல்லாம் உண்மையேயன்றிப் பிறிதொன்றில்லை என்று சத்தியம் செய்கிறேன். வருஷப் பிறப்பன்று பரிசளிப்பு விழா ஒன்றில் கலந்து கொண்டு ஊர் திரும்ப, எழும்பூர் ஐங்ஷனில் வந்து நின்றேன். திடுதிப்பென்று மேற்குப் புறத்திலிருந்து பயங்கரக் கூச்சல் கேட்டது. ஜ ன ங் க ளு ம் ஒடத்தலைப்பட்டனர். நானும் ஒடினேன். நீான் ஒருவன் வராவிட்டால் அற்காக ரெயில் நிற்கவே நிற்காது. அது தெரியும். தெரிந்துதான் ஒடினேன். குப்பைத் தொட்டியில் யாரோ பிடி கொளுத்திப் போட்டு விட்டானும், அவ்வளவுதான். தீ, குப்பையைப் பற்றி, அத்துடன் பற்ருமல், அடுத்திருந்த ஒரு பெரிய பங்களாவின் முகப்புக் கீற்றுக் கொட்டகை யையும் எரித்து விட்டது. குப்புை கோபுரமாகாது என்றுதான் எனக்குச் சொல்லித் தந்திருக்கிருர்கள். ஆனல் அன்று குப்பை, கேவலம் குப்பையானது ஒரு பங்களாப் பிரச்னையாக மாறி, அது அரசாங்கக் கோட்டை அளவிலும் போய்ச் சேர்ந்து விட்ட்து.