பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

குப்பை விளைவித்த அதிசயத்துடன் ரெயிலை அடைந்தேன். என்ன ஆச்சரியம்! எனக்காக ரெயில் காத்திருந்தது. வண்டியில் ஏறிக் கொண்டே ஆமாம், ஐயா! டிக்கெட் வாங்கிக் கொண்டுதான்!

வீட்டுக்கு வந்ததும் இந்தக் குப்பையைப் பற்றியே என் மனம் சதா சுற்றித் தொலைத்தது. அதைப் பற்றி எதையாவது கிறுக்கினால்தான், என் மூளை சமாதானமடையும் என்று எண்ணினேன். அதன் விளைவுதான் இக்கட்டுரை.

இவ்வளவு காலம் எழுதி முடித்துவிட்டு, இப்போது இருந்திருந்து குப்பையைப் பற்றி எழுதத் தொடங்கி இருப்பது கண்டு நேயர்கள் என் பேரில் ஏளனம் காட்டாமல் இருக்க வேண்டுமென்று தான் இவ்வளவும் சொன்னேன்!

குப்பையின் மகிமைக்கு ஒர் உண்மையைச் செப்பினால் போதும்!

அதாவது, பொழுது பிறந்து பொழுதுபோனால், குப்பைப் பிரச்னைதான் நம் வீடுகளிலே எடுத்த எடுப்பில் தலைதூக்குகிறது. "குப்பையைப் பெருக்கினால்தானே வீட்டில் லட்சுமி தங்குவாள்?" என்று ஒவ்வொரு மனையிலும் வீட்டுத் தாய்மார்கள் எச்சரிக்கை செய்வதை எப்படி காலையில் மறக்காமல் இருக்கிறார்களோ, அது மாதிரியாகவே அந்திப் பொழுதிலும் இருந்து எச்சரிக்கை விடுக்கிறார்கள்! அந்தியிலேயே வீட்டைப் பெருக்கிச் சுத்தம் செய்து குப்பையை அப்புறப் படுத்திவிட