பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7


1. மாரிஹோரா, 2. புரோக்ரஸ் 3. ஸ்டாமாடிஸ் 4. ஸ்டேட் ஆஃப் ராஜஸ்தான்!... 'திரைகடலோடியும் திரவியம் தேடு' என்று சொல்லியிருக்கிருள் ஒளவைப் பாட்டி. கடலில் ஓடிவிடச் சொல்லவில்லை மூதாட்டி, கப்பலில்தான் போகச் சொன்னுள். பாய்மரக் கப்பல் தொடங்கி வைக்க கடல் வாணிபம் கப்பல் வரைக்கும் வளர்ந்து, இப்போது நீர் மூழ்கிக் கப்பல் அளவுக்கு முன்னேற்றம் கண்டிருக்கிறது. கடலுக் கும் தமிழகத்துக்கும் தொன்றுதொட்டுத் தொடர்பு இருந்து வந்திருப்பதற்குச் சரித்திரம் சான்று பகரும். சுமத்திரா, ஜாவா போன்ற அயல் நாடு களுக்குச் சென்று நம் பண்டைத் தமிழர்கள் வியாபாரம் செய்தார்கள். சிவப்பதிகாரத் தலைவன் கோவல்னும் கப்பலில் சென்று பொருளிட்டியதை நாம் படங்களில் பார்த்திருக்கிருேம். பர்மா, இலங்கை முதலிய இடங்களுக்குக் கப்பல் பயணம் செய்து பணக்காரர்களாகத் திரும்பிய கதையும் இப்போது பழங்கதையாகிவிட்டதே! கப்பல் போய்விடும்; ஆனல் கரை தங்கிவிடும்! -இது பழமொழி, சொன்ன சொல் நிலைத்து நிற்கும் என்பதற்கு அழுத்தம் ஊட்ட எழுந்த பழமொழி இது. பெயரில் என்ன இருக்கிறது?’ என்று சொல்லிவிட்டார் ஷேக்ஸ்பியர். ஆனால், பெயரில் எல்லாம்தான் இருக்கிறது. இல்லையென்ருல், கப்பல்