பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80


செல்லும் இளவட்டத்தின் மீது, அந்த டெர்லின் ஸ்லாக் கசங்காத வகையில்-விழும். கீழே உள்ளவன் மேலே பார்ப்பான். ‘அண்ணலும் நோக்கினன்! அவளும் நோக்கிள்ை!' இந்தப் பாட்டு வேறு கேட்கத் தொடங்கி விடும். மாடி வீட்டுப் பாவை கீழே இறங்கி வந்துஇறங்கி வந்து அந்த யுவனே நேர் கொண்ட பார்வையால் நோக்குவாள். "ப்ளீஸ் எக்ஸ் யூஸ்மி!...' என்று கம்பீரமான குழைவுடன் நெளிந்து நெளிந்து-முகப் பவுடர் பூச்சு வெடித்து உதிராதபடி - மன்னிப்புக் கேட்பாள். குற்றத்தை உணர்ந்த அந்தப் பேசும் கிளியை பெரிய மனசு பண்ணி மன்னித்து, தன்னுடைய நிலையை தெய் வத்தின் அந்தஸ்துக்கு உயர்த்திக் கொள்ளுவான் அவ்வாலிபன். போக மனமில்லாமல் அவன் மறுக, போகச் செய்யாமல் இவள் மறுக, இப்படிப்பட்ட 'காதல் தவிப்பு’’ சில:கணங்கள் தொடர, கடைசி யில் மாரன் கணே தெய்வமே என்று அல்ல, 'ஏ மன்மதப் பிரபுவே! என்று குறுக்கிட்டு, அவர்கள் இருவரையும் சம்சார சாகரத்தில் தள்ளி வேடிக்கை பார்க்கவும் செய்து விடும்! - “ஏண்டி பாமா! நீ இப்படியே அசமந்தமாய் இருந்திண்ட்ே யிருந்தா, புக்ககத்திலே போய் எப்படியடியம்மா குப்பை கொட்டப் போறே?' என்று அருமை மகளைச் செல்லமாகக் கடிந்து