பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 I கொள்ளும் அன்புத் தாய்மார்களும் இருக்கத்தான் இருக்கிரு.ர்கள். இதற்கு விடையாக, என்னம்மா இது? சந்திரமண்டல யாத்திரையிலே வெறும் சூன்யத்திலே நாலு நிமிஷம், ஆறு நிமிஷம்னு நடந் திண்டு திரும்பற இந்த யுகத்திலே இப்படி நீ என்னைக் கேட்டா, நான் என்னம்மா பண்ணுற தாம்? புக்ககத்துக்கு குப்பைபைக் கொட்டவா போவா? கு ப் ைப ைய அப்புறப்படுத்தன்னு போவா!' என்று யாரும் ரிடார்ட் செய்ததாக, நாம் பத்திரிகையில் நாளது வரையிலும் படித்தது கிடையாது. குப்பை கொட்டுவது' என்ற குறிப்பு, எவ்வாறு குடும்பம் நடத்துவது:” என்பதைச் சுட்டுவதற்கே பயன்படும் சொற்ருட ராகவே நாம் கொள்ள வேண்டும். நம் நாட்டிலே குப்பையை வயலுக்கு உரமாக உபயோகப்படுத்துகிருேம். எருக் குழியாகவும் அதே குப்பைக் கிடங்குதான் பயன்படுகிறது. அடுப்புச் சாம்பல், காய்ந்த சருகு, புளிய ஒடு, நெல் உமி, கொஞ்சம் எரு-இவ்வளவும் சேர்ந்து குப்பையின் தரம் - விஞ்ஞானத்தரமல்ல-விலைத் தரம் உயர்த்தி, (அசந்து மறந்தால் தெரு மணலைக் கொட்டி மூடி குப்பையைப் பெரிதாகக் காட்டு வோரும் உண்டு) அதன் மூலமாக விலையையும் உயர்த்தி விடுவது சகஜம். எங்கள் பக்கங்களிலே இந்தச் சர்வ சாதாரணமான குப்பைக்காக எங்கள் பகுதிப் பெண்கள் சண்டை போட ஆரம்பித்து, பதினெட்டு நாள் நீடித்து பாரத மகிமை