பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

உண்டாக்கி விடுவதும் வழக்கம். இவர்கள் செம்புத்தண்ணீரை மட்டுமே குடித்துவிட்டு, நாள்கணக்கில் "ட்யூன்" போட்டு பாடும் பாட்டை-எதுகை மோனைச் செழிப்புப் பாட்டைக் கேட்டால், சினிமாக்காரர்கள் அப்படியே மயக்கம் போட்டுவிழுந்து விடுவது நிச்சயம்!

ஆடி அண்டுகிறதல்லவா, அப்போதெல்லாம் எங்கள் நாட்டுப் புறங்களிலே குப்பைப் பருவம் ரொம்பவும் கூடுதல். பத்திரிகைக்காரர்கள் பணம் கேட்பதால், குப்பை "ரேட்" விவரத்தை வெளியிட முடியாமல் எங்கள் ஆட்கள் தவிக்கிறார்கள். அதற்காக, அலஞ்சிறான் காடு செல்லையா, ஆவணத்தான் கோட்டை அம்பலம், குளமங்கலம் கங்காணி, மாங்குடி செட்டியார் எல்லோரும் நான் முந்தி--நீ முந்தி என்று குப்பைக்குப் பணம் கொட்டிக் கொடுத்துக் கொடுத்துப் போட்டிப் போட்டுக் கொண்டு ஓடாமலா இருக்கப் போகிறார்கள்?

கேவலம் குப்பை என்போம்!

சீனாக்காரர்கள் பண்டைய நாட்களிலே மனிதர்களின் சித்தபேதத்துக்குத் தெளிவுண்டாக்க, குப்பைக் குழிக்களுக்குள்தான் புதைத்து நாட்கணக்கில் அப்படியே வைப்பார்களாம்! இவர்களது "மூளைச் சலவை" முறைக்கும் இதுவேதான் பிள்ளையார் சுழி இட்டது போலும்!

எங்கள் வீட்டுக் குப்பை மேட்டில் நின்று சேவல் "கொக்கரக்கோ" பாடினால்தான் பொழுது பலா