பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&3 ரென்று விடியும். ஆல்ை நாங்கள் ஆயிரம்தான் 'ரோஜா குல்கந்த்' செய்து போட்டாலும், அந்தச் சேவலுக்கு குப்பையைக் கிளறும் புத்தி மட்டும் போவதில்லை. குப்பையில் குருக்கத்தி முளைத்த கதைதான் அது. குப்பையில் குன்றிமணி யாக அந்த 'டாக்டர் கொக்கரக்கோ' இருந்து விடக்கூடாதா, கடவுளே! பணம்தான் பந்தியில் பேசும். பணம் இருந்து விட்டால், குலம் குப்பையில்தானம்! அதைப் பற்றி யாரும் சட்டை அல்ல்து 'ஸ்லாக்' பண்ண மாட்டார்களாம்! வாஸ்தவம்தான்! இன்றைக்கு அரசனுக இருப்பான் நாளேக்கு அவனே ஆண்டியாவதும் உண்டு. அதுவே அப்படி யிருக்க, இந்தக் குப்பைகள் ஒரு நாள் குருட்டு அதிர்ஷ்டத்தில்ை உயர்ந்து, கோபுரங்கள் ஒரு நாள் கெட்ட நேரத்தில்ை தாழ்ந்துவிடுவதும் இல்லையா? திருடர்கள் தாங்கள் திருடிய வைரங் களைக் குப்பையில் குழிபறித்துப் புதைத்து மறைத்து வைத்து விட்டார்களாம், எங்கோ ஓரிடத்திலே!. அப்புறம் குப்பைகள் கோபுரமாக உயர்ந்து விடு வதில் அதிசயம் என்ன இருக்க முடியும்? குப்பையிலும் இனப் பாகுபாடு ரொம்பவும் உண்டு. ஆசாரிப் பட்டறைக் குப்பை என்ருல், அதைக் கிளறினல் ஒரு குன்றிமணி தங்கமாவது சிக்காமல் இருக்காது. அதற்காக, ஒரு சலூன் குப்பையை யாராவது கிளறுவார்களா? ஆளுல்