பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& క్షీ அந்தக் குப்பைக்கும் 'மவுஸ்' இல்லாமல் இருப் பதில்லையாம்! குப்பை கூளங்களை அப்புறப்படுத்தும் பணியில் இயற்கையின் செல்வமிகுதூதுவர்களாக காக்கைகள் உலவுகின்றன. அ ர சாங் க முத்திரைகளுடன் குப்பை வண்டிகள் உலவுகின்றன. இம்மாதிரிப் பணிக்கென்றே ஒரு தனிப்பட்ட செக்ஷனே இயங்கு கிறதென்ருல், குப்பைக்குள்ள அந்தஸ்து-ராசாங்க அந்தஸ்து உங்களுக்குப் புரிகிறதல்லவா? துப்பறியும் நிபுணர்களுக்கு எவ்வளவோ சமயங்களில் இந்தக் குப்பைகள் கை கொடுத்திருக் கின்றன! 'சஸ்பென்ஸ்’ தலங்களாக இதே குப்பைகள் பரிமளிக்கின்றன-என்னுடைய இரண் டொரு கதைகளிலே! காதலுக்கும் இந்தக் குப்பைக் கூடைக்கும் வெகு பொருத்தம் உண்டு. எத்தனையோ காதல் கடிதங்களை ஒன்றுமில்லாமல் ஆக்கி மென்று விழுங்கி ஏப்பம் விட்ட மகாபுண்ணியம் இந்தக் குப்பைக் கூடைகளுக்கு உண்டு. - எங்கள் நாட்டிலே-அதாவது ஊரிலே சிறுவர் சிறுமியர் மணலைக் குவித்து வைத்து, பிறகு அதைக் கலைத்துவிட்டு விளையாடுவார்கள். விளையாட்டுடன் பாட்டும் விளையாடும். 'குப்பையைக் குப்பையைக் கிளறி கோணல் கையாய் போச்சு!