பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

"ஏனப்பா அழுகிறாய்?" என்று முட்டை தேடிவந்தவன் கேட்டானாம்.

"வாத்தியார் முட்டை போட்டு விட்டாரய்யா!" என்று அந்தப் பிள்ளை அழுதானாம்.

தேடிப்போன முட்டை வழியில் கிட்டிவிட்டதே என்று சந்தோஷப்பட்ட அந்த அப்பாவி, அந்தப் பையனின் சிலேட்டுப் பலகையில் இருந்த "சைபர்" அடையாளத்தையே முட்டை என்று அறிந்து, அந்த "சைபர்" வடிவத்தையே முட்டையாகக் கற்பனை செய்துகொண்டு, அந்தக் கற்பனையின் வடிவத்திலேயே உலகத்தின் அமைப்பினையும் கணித்துக் கொண்டானாம்!

இது ஒரு கதை!

முட்டைக்கும் பள்ளிப் பிள்ளைகளுக்கும் இருக்கக்கூடிய ஒட்டுறவு ஒரு பக்கம் இருக்கட்டும்.

முட்டை, வாழ்க்கையில் பெற்றிருக்கக்கூடிய இருப்பிடமும், அந்தஸ்தும் உள்ளனவே, அவை உடலியல் ஆரோக்கியத்தின் சாஸ்திரத்தால் உண்டாக்கப்பட்டவையே அல்லவா?

ஆரோக்கிய நல்வாழ்வுக்கு முட்டையிலுள்ள 'பி' வைட்டமின் மிகவும் பயன் தரவல்லது. முட்டையின் வெள்ளைக் கருவில் 100 சிரெடையில் *067 அளவு சுதையச் சத்தும் 180 அளவு எரியச் சத்தும் உள்ளன. மஞ்சள் கருவில் சுதையச் சத்து