பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8


களுக்குப் பெயர் வைப்பார்களா, எஸ். எஸ். ஜலகோபால், எஸ். எஸ். ஜலமோகினி என்று! நான்கூட எஸ். எஸ். ஊர்வசி என்ருெரு நாவலை எழுதிக் கொண்டிருக்கிறேன். அந்தக் கப்பல்கதை ரொம்பவும் பிரமாதமாக இருக்கும்! தயவு செய்து இந்தத் துப்பை நம் பதிப்பாளர்கள் காதில் போட்டு விடாதீர்கள், கப்பலை வைத்துக் கொண்டு இந்தக் கதையை எழுதப்போக, ஒரு சுரு:மீன் என்னைத் துரத்திய உண்மை அவர்களுக்கு என்ன தெரியும்? கப்பல்கதை என்ருல், கேவலம் ஒரு கப்பல் பணமாவது தர வேண்டாமோ? விசாகப் பட்டினத்திலும் நாம் கப்பல் கட்டிக் கொண்டிருக்கிருேம். நமக்கு இது ஒரு பெரிய பெருமைதான்! இந்தியக் கடற் படையின் வரலாறு சரித்திரப் பிரசித்தமானது. தூத்துக்குடியில் முதல் சுதேசிக் கங்பலேக் கட்டி மிதக்க விட்ட கப்ப லோட்டிய தமிழனே இன்று நாம் மறக்காமலிருப் பது மாதிரியே, அன்று வெள்ளைக்காரர்களும் மறக்காமல் இருந்தார்கள்! மேலைநாட்டு நாகரிகப்படி டிப்டாப்"பாக உடுத்துக் கொண்டிருந்தால், அவர்களைப் பார்த்து, என்ன ஸார், இப்போதுதான் ஒட்டைக் கப்பலில் இந்து இறங்கினர்களாக்கும்?' என்று நையாண்டி செய்வதும் உண்டு. ஒட்டைக் கப்பலில் வரும் சாகலம் அந்தப் புண்ணியாத்மாக்களுக்குத்தான் தெரியும் போலும்!