பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90


வும் தேர்ந்தெடுக்கப்படுவது இயல்பு! தேர்தல் கூத்துக்களிலே—தேர்தல் கூட்டங்களிலே முட்டைகளுக்கு ஏற்படும் கிராக்கியே அலாதி!

நாகரிகம் பரவினாலும், கடிகாரம் பரவாத பட்டிக்காடுகளிலே சேவல் கோழிதான் அவ்வூர் ஜனங்களுக்கு 'காலம்' அறிவிக்கும் 'டைம்கீப்பர்'களாக விளங்கி வருகின்றன, கோழி கூப்பிட அவர்கள் எழுந்து அலுவல்களைக் கவனிப்பார்கள். கோழிகள் உறங்கிவிட்டால், அப்புறம் கிராம மக்களும் உறங்க வேண்டியதுதான். விண்ணிடைத் தெரியும் கதிரவன் மூலம்தான் பொழுது புலரப்போகும் ரகசியத்தின் உணர்வு கோழிகளுக்குத் தெரிகிறதாம்! அதன் வாயிலாகத்தான் அது "கொக்கரக்கோ" என்றி அறிவிப்பு கொடுக்கிறதாம்! இந்த நுண்ணறிவுக்காகவே அதற்கு 'டாக்டர்' பட்டம் சூட்டி டாக்டர் கொக்கரக்கோ என்று போற்றலாமல்லவா?

"சேவற் கோழியுண்டு காகமுண்டு—வானம்
செக்கச் சிவந்து தெரிவதுண்டு
மேவு பொன்னே! அதிகாலை தெரிந்திட

வேறு கடிகாரம் வேண்டுமோடி!"


—இவ்வாறு கேட்பவர் கவிமணி.

கொத்தித் திரியும் கோழியைக் கூட்டிவைத்து விளையாடச் சொல்லவில்லையா பாரதி?

'இரவறிவான்' என்று சேவல் கோழிக்குப் பட்டப் பெயர் உண்டு!