பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தர்மத்தை வழிபட்டு, மனித தருமத்துடன் நடந்துவரும் நம்மை பாகிஸ்தான்காரனும் சீனக் காரனும் பூச்சாண்டி காட்டிப் பயமுறுத்தி வருகிற தர்மசங்கடமான நேரத்தில், தர்மத்தைப் பற்றியும் சங்கடத்தைப் பற்றியும் கொஞ்சம் சிரிப்புடன் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?பேஷாக வேண்டும்! 'வாழ்க்கை என்பது ரோஜா மெத்தையல்ல!' என்று கனகச்சிதமாக மற்றவர்களுக்கும், மற்றவர் கள் நமக்குமாகச் சொல்லிக் கொள்வது இப்போ தெல்லாம் ஒரு வகைப்பட்ட நாகரீகமாகப் போய் விட்டது. 'நமக்கு ரோஜா மெத்தை எதற்கு? சாதாரணப் பாயும் தலையணையும் போதாதா?