பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94


என்று கேலியாக நாம் விமர்சனங்களைப் பரிவர்த்தனை செய்து கொள்ளும் நேரத்திலே, மேற்படி பொன்மொழியில் இருக்கும் பொன்னின் "காரட்" அளவைப் பற்றியோ, அல்லது அதன் வாசகத்திலுள்ள எச்சரிக்கைப் பண்பைப் பற்றியோ அக்கறைப்படுவது இல்லை. அப்படி அக்கறைப்பட்டால், அப்புறம் கொஞ்ச நஞ்சம் இருக்கும் சந்தோஷம் கூட அக்கரைப் பச்சையாகி விடுமே! "காயமே இது பொய்யடா! காற்றடைத்த பையடா!" என்று மணக்காத காயப் பாட்டு நம்மைச் சிவப்புக் கொடி காட்டிப் பயமுறுத்துமே என்கிற தர்மசங்கடமான நிலைவேறு ஏற்பட்டுவிடுமே!

"காதல், காதல், காதல்
காதல் இன்றேல்
சாதல், சாதல், சாதல்!"

இப்படி ஒரே பாட்டில் வாழ்க்கைக்கு ஆரம்பமும் முடிவும் கட்டிக் கொண்டு "லவ்" செய்யத் தொடங்கும் யுவனும், யுவதியும் திருமணக்கட்டம் அண்டுவதற்குள்ளாக, அவர்களை அண்டி ஆட்டிப் படைக்கும், தர்மசங்கடங்கள் ஒன்றல்ல, இரண்டல்லவே!...... காதல் கீதத்துக்கு ப்ருக்கா கொடுத்துச் சாதகம் செய்ய முனையும் ஜோடிக்குத் தங்களது குடும்பச் சூழல் சாதகமாக அமையாவிட்டால், மேற்கண்ட "லவ்டூயட்"டில் அப்ஸ் வரம் தட்டி, தர்மசங்கடம் விளைந்துவிடாதா? அப்பா-அம்மாக்கள் சினிமாவில் வருவது மாதிரி