பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜப்பானுடைய ஜீவன்

பழைய வழக்கங்களாகிய சுவர்களை ஒரே யிரவில் இடித்துத் தள்ளி, ஜப்பான் வெற்றிக் கோலம் பூண்டு நிற்பதை ஒருநாட் காலையில் எழுந்தவுடன் உலக முழுதும் பார்த்து வியப்பெய்திற்று. இம் மாறுதல் நம்ப முடியாதபடி அத்தனை விரைவில் நடந்தது: உடுப்பு மாற்றுவதுபோல் இருந்ததே. யன்றி, ஒரு புதிய கட்டிடத்தை மெதுவாக எழுப்பு வதுபோவில்லை. முதிர்ச்சியால் விளையும் தன்னம் பிக்கையின் பலத்தையும், புதிய உயிருக்கியல்பாகிய புதுமையையும், எல்லேயற்ற ஸாத்யத் தன்மைகளை யும் ஜப்பான் ஏககாலத்திலே காண்பித்தாள். அப் போது சிலர் :- இது சரித்திரத்திலே ஒரு விநோதம்; காலதேவதையின் குழந்தை விளையாட்டு ; சவர்க் காரத்தில் உண்டாகும் குமிழியைப் போலே, கோளத்திலும் வர்ணத்திலும் குறைவில்லை; ஆனல் உள்ளே ஒட்டை, ஸ்த்தில்லாதது” என்றெண்ணிப் பயந்தார்கள். ஆனல் ஜப்பானே, தன் எதிர்பாராத சக்திப் பிரகாசம் சிலநாள் விந்தையன்று, காலத்தில் யதிர்ச்சையாக விளைந்த விளைவன்று : ஆழ்ந்த இருளி னின்றும் வீசுண்டு மறுகணம் சூன்யக் கடலில்