பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்

இற்சியாலே காட்டவில்லை; படைக்குந் திறனுலே இச்ட்டிற்று. புறக்கோலத்தாலன்று, ஆத்மப் பிரகா சத்தால், இந்த ஸ்ருஷ்டி சக்தி எல்லா ஜாதிகளிலும் உண்டு. இதன் தொழில் மனிதரின் குணங்களைக் கவர்ந்து, தன் ஆதர்சங்களுக்குத் தக்கபடி அவற்றை உருமாற்றுதலாம். ஆணுல் இங்கே அந்த சக்தி பவிதமாய்விட்டது. இங்கு, ஜப்பானில், அது எல்லா மனிதரின் மனதிலும் அழுந்திவிட்டதாகத் தோன்று கிறது. தசை, நாடிகளில் ஊறிவிட்டதாகப் புலப் படுகிறது. உங்கள் மன உணர்ச்சிகள் உண்மை யாயின. புலன்கள் தீக்ஷண்யம்ாயின. கைகள் இயற்கைத் திறமை பெற்றன. ஐரோப்பாவின் மேதையால் அங்குள்ள ஜனங்களுக்குக் கூட்டஞ் சேர்க்கிற சக்தி ஏற்பட்டது. அந்த சக்தியை ராஜ்ய நீதியிலும், வியாபாரத்திலும், பெளதிக சாஸ்த்ர ஞானத்தை ஒருமுகப்படுத்துவதிலும் உபயோகிக் கிரு.ர்கள். ஜப்பானுடைய மேதையோவென்ருல் உங்களுக்கு ஸ்ெளந்தர்ய தர்சனத்தையும், அதை வாழ்க்கையில் நிரூபணம் செய்யும் திறமையையும் கொடுத்தது. இதல்ை நீங்கள் வேண்டியபோது கூட்டஞ் சேர்க்கிற திறமை தன்னலே வந்துவிட்டது. ஏனெனில் அழகின் இசை அந்தராத்மாவில் உள்ளது. அதன் புற உடல் ஸங்க-ஸ்தாபன சக்தி.

ஒவ்வொரு நாகரிகமும் ஒவ்வொருவிதமான மனுஷ்ய அனுபவத்தின் மொழிபெயர்ப்பு. உலகத்தி லுள்ள வஸ்துக்களின் சண்டைப் பகுதியை மாத்திரம் ஐரோப்பா அழுத்தமாகத் தெரிந்துகொண்டிருப்ப தாகத் தோன்றுகிறது. அந்தப் போராட்டத்தை வெற்றியினலேதான் வசப்படுத்த முடியும். ஆதலால் அவள் (ஐரோப்பா) எப்போதும் போர் செய்ய ஆயத்தமாகவே யிருக்கிருள். அ வ ளு ைட ய கவனத்தில் பெரும்பகுதி ஸைந்யங்கள் சேர்ப்பதிலே