பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜப்பானுடைய ஜீவன் * . . its

வைக்கவுங் கருதித் தமது மனுஷ்யத் தன்மையை லங்கங்களின் பெரிய் பாரத்தின் கீழே அழுத்தி மூச்சைப் பிடித்துக் கொள்ளுகிருர்களென்பதை ஜப்பான் தன் மனதில் உரக்கக் கூறிக்கொள்ள வேண்டும். தர்ம விதியிலே உறுதியான நம்பிக்கை செலுத்த வேண்டும். ஆதலால் நவீன ஜப்பானில் அதிகரித்துவரும், மேற்குத் திசையாரை அனுகரணம் (அபிநயம்) செய்வதாகிய, பழக்கம் இவளுடைய பலத்துக்கும், ஸ்திரத்தன்மைக்கும் அவசியமென்று நான் நினைக்க இடமில்லை. அது இவளுடைய உண்மையியல்புக்குப் பெருஞ் சுமையாய், பலக் குறையை உண்டாக்குகிறது. காலமாக ஆக இந்த பலஹlனம் மிகுதிப்படும். நவீன ஜப்பானியர் பால்யதசை முதலாகக் கற்றுக் கொள்ளுகிற மேற்குத் திசையின் ஆசாரங்கள், அ ந் ய நாகரிகத்தின் வ ழ க் க ங் க ள், க ைட சி யாக ஒரு நாள் ஜப்பான் தனது சொந்த இயல்பை மறக்கும்படி செய்துவிடும். அப்போது ஜப்பான் மக்கள் தமது புராதன பூர்வ காலத்தை மறந்துவிடுவர். தமது சரித்திரமாகிய குன்றத்திலிருந்து பாய்ந்து வரும் நதியைத் தாமே தடைகளாய் நின்று அடைத்துப் போடுவார்கள். அப்போது அவளுடைய நாக ரிகத்தை ஸெளந்தர்யத்தின் செழிப்பினுலும், பலச் செழிப்பாலும் மிக வளம்பெறச் செய்த ஜீவ நீர் எதிர் காலத்துக்கில்லாமல் போகும்.

இதைக் காட்டிலும் ஜப்பானுக்குப் பெரிய தொரு விபத்து யாதெனில்-மேற்கின் ւ:յ* கோலங்களே அபிநயிக்கும் செய்கை மாத்திரமன்று : மேற்குத் திசை நாகரிகத்தின் உள்ளிருந்து நடத்தும் சக்தியையே தனதாக அங்கீகரித்தல். அவளுடைய ஜன ஆதர்சங்கள் ஏற்கெனவே, ராஜ்ய விவகாரங் களின் முன்னே தோற்குங் குறிகளைக் காட்டுகின்றன,

§