பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5}} - : ... بدن مس - ۰یسی

அவை உண்டாயின. இந்தத் துணிசெயல்களின் நீச, பாதகப் பகுதிகளிலே பொதுஜனங்கள் உத்தர வாதமில்லாமல், இவற்றிலுண்ட்ர்கும் விர, மானு வீகப் பயிற்சிகளின் லாபத்தை மா த் தி ர ம் பெற்றனர். அதஞல் பொதுஜனங்களுக்கு விளைந்த நன்மைகள் எவையெனில் : ஆபத்துக்குப் பின் வாங்காத விசுவாசமும், மானக் கட்மைகளில் ஒரு மனப்பட்ட பக்தியும், சரளுகதியிலே நிறைவும், மரணத்தையும், விபத்துக்களையும் பயமின்றி அங்கீ காரம் செய்யும் திறனுமென்க. ஆதலால் அரசரும் ஸேனுபதிகளும் அனுஸ்ரித்த முறைகளினின்றும், ஜனங்களின் ஹ்ருதயத்தில் ஆஸ்னமிட்டு விளங்கிய ஆதர்சங்கள் பிரமாதமான மாறுதலுக்குட்பட வில்லை. ஆனல் மேற்கு நாகரிகத்தின் குணம் பரவி வருகிற இக்காலத்தில் எல்லா வகையாலும் விரோ தங்களையும் ஆசைகளையும் வளர்க்கும்படி ஜன முழுதும் பால்ய முதலாகவே பயிற்சி பெறுகிறது. சரித்திரத்தில் பாதி யுண்மைகளையும் பொய்களையும் ஸ்ருஷ்டி செய்வதனுலும், இதர ஜாதியாரை எப் போதும் இடைவிடாமல் பழித்து அவர்களிடம் விரோதஎண்ணங்களே வளரச்செய்வ களுலும்,பெரும் பகுதி பொய்க:ேயும் மனிதப் பொது நலத்தைக் கருதி விரைவில் பறக்கத் தக்கனவுமாகிய லம்பவங் களுக்கு ஞாபகச் சின்னங்கள் கட்டி நிறுத்துவத ஞலும், இங்ங்ணம் ஒவ்வொரு ஜாதியும் தன்னைத் தவிர மற்ற ஜாதிகளுக்குத் தீய விபத்தாக மிகுந்து வருகிறது. அது மானுஷகத்தின் ஊற்றிலேயே விஷத்தைக் கலந்தது போலாகிறது. நம்முள் மிகப் பெரியோரும் மிக நல்லோரும் வாழ்க்கையிலேயே காட்டிய ஆதர்சங்களைப் பழிப்பதுபோலாகிறது. உலகத்து ஜாதியருக்கெல்லாம் அஸ்-ரத்தனமான ஸ்வார்த்த நாட்டமே, ஸ்ர்வ ஸாமான்யமான பெருந் தர்மமென்று காட்டுவது போலாகிறது.